மணிமேகலையை, இருபத்துதொரு மாப்புள பார்த்துட்டுப் போய்ட்டாங்கா, ஆனா ஒரு மாப்புளையும் பிடிக்கல அவுங்க அப்பா பெரியகருப்பத் தேவருக்கு. தன் மகள் போகிற இடத்தில நல்ல இருக்கனும் என்கிற வைராக்கியத்தில எல்லா மாப்புளயையும் தட்டிக் கழிச்சாரு.
ஒரு வழியா இருபத்திரண்டாவது மாப்பிள்ளையான சந்திரனை வீட்டில்எல்லாத்துக்கும் பிடிச்சுப் போச்சு. காரணம், மாப்புளைக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. வீட்டுக்கு ஒரே பொண்ணுகிறதனாலே கோலகலமாகக் கல்யாணத்தை முடிச்சாரு பெரிய கருப்பத்தேவரு. செல்லமாக வளர்த்த தன் மகள பிரிந்தப்ப அவரு பட்ட கஷ்டத்தைப் பார்த்து புதுப்பட்டி கிராம மக்கள் அனைவரையும் ஆச்சிரியப் பட வைத்தது.
மாப்புள பக்கத்து ஊருங்கிறதுனால, காட்டில வெலஞ்ச சோளத்தையும் கேப்பையையும் எடுத்துக்கிட்டு அப்பப்ப பாத்துட்டு வருவாரு பெரிய கருப்பத்தேவரு.
புரட்டாசி மாசம் எப்பவுமே புதுப்பட்டியில திருவிழா நடப்பது வழக்கம். திருவிழா சொல்லுறதுக்கும் அப்படியே மகளப் பாத்த மாதிரியும் இருக்குமுனு வீட்டில மனைவி வீராயிக்கிட்டச் சொல்லிட்டு கிளம்புனாரு பெரிய கருப்பத்தேவரு.
அங்கே, மணிமேகலை கண்ணுல, காவேரி ஓடிக்கிட்டு இருந்துச்சு. தன் மகள் கண்ணீரும் கம்பளையுமா இருந்ததப் பார்த்து பாவி மனுஷன் கதறிட்டாரு. விசாரித்ததுல புருசன் பொண்டாட்டி ரெண்டு பேத்துக்கும் சண்டை. அப்பக்கூட நம்ம பொண்ணு மேல தான் தவறு இருக்குமுனு நெனச்சு மாப்புளைக்கிட்ட சமாதணமாப் போனாரு பெரியகருப்பத் தேவரு. இந்தப் பிரச்னை அடிக்கடி நடக்க, பெரிய கருப்பத்தேவரின் மனச சங்கடப் பட வைச்சுருச்சு.
"நல்ல மாப்புளனு விசாரிச்சுத் தானே கட்டிக்கொடுத்தோம். இறைவா!எப்படியாவது மாப்புள மனச மாத்தி எம் பொண்ண நல்ல வச்சுக்கனும் நீ தான் வழிவக செய்யனும்" னு இறைவனுக்கிட்ட வேண்டாத நாள் இல்ல.
"நல்ல மாப்புளனு விசாரிச்சுத் தானே கட்டிக்கொடுத்தோம். இறைவா!எப்படியாவது மாப்புள மனச மாத்தி எம் பொண்ண நல்ல வச்சுக்கனும் நீ தான் வழிவக செய்யனும்" னு இறைவனுக்கிட்ட வேண்டாத நாள் இல்ல.
வீராயி இறந்த பின்னர் தன் பேர பிள்ளைகளைப் பார்க்க அப்ப அப்ப போவாரு. காலங்கள் ஓடின....... ஒரு நா பேர பிள்ளையைப் பாக்க போனரு. அப்ப, "தனியா எத்தனை நாளைக்குத்தான் சமச்சு சாப்புடுவிங்க எங்களோட இருங்க தாத்தா"னு பேரபிள்ளைக சொல்ல, "உன் அம்மா படுற பாட்டை என்னால பாக்க முடியாது பேராண்டி"னு மனுசல நெனச்சுகிட்டுப் பேர பிள்ளையை விட்டு கிளம்ப மனமில்லாமல் கிளம்பினாரு ஊருக்கு. கண்ணீருடன் வழி அனுப்பினா மணிமேகலை.
பெரிய கருப்பத்தேவரு வீட்டை விட்டுப் போனாவுடனே சண்டை போட ஆயுத்தமானான் சந்திரன். "என்னடி! அப்பனும் மகளும் சேந்து நாடகம் ஆடுறிங்களா இப்ப சொல்லுரேன் கேட்டுக்க, இனிமே ஒங்க அப்பன் இங்க வந்தா நடக்கிறதே வேற" என்று திட்டித்தீர்த்து விட்டான். என்ன தான் திட்டினாலும் ஒரு வார்த்தைக் கூட எதிர்த்துப் பேசாமல் கண்னீரைத் துடைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.
புதுப்பட்டித் தலைவர் வீட்டில விஷேசம். ஆட்டுக்கறியை ஆளு ஆளுக்கு அடிச்சுக்கிட்டுச் சாப்பிட்டாங்க ஊர் ஜனங்க. மனசுல வேதனையை வச்சுக்கிட்டு ஏதோ கூப்பிட்டாங்க என்கிற காரணத்துக்காக சாப்பிட்டாரு பெரிய கருப்பத்தேவரு. வீட்டுக்கு வந்து படுத்தவருக்கு அப்படியே கையும் காலும் சுண்டி இழுத்துருச்சு. ஊருக்குள்ள ஒரே பேச்சு பெரிய கருப்பத்தேவருக்கு பக்கவாதமுனு. மணிமேகலைக்குத் தகவல் கொடுத்தாங்க. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஒடியந்தா.
சந்திரன் வேண்டா வெறுப்பாக, பெரிய கருப்பத்தேவர ஆஸ்பத்திரில கொண்டுச் சேர்த்தான். மகள் மணி, நல்லாப் பார்த்துக்கிட்டா. உடம்பு சரியாச்சு, ஆனா பெரியகருப்பத்தேவருனால நடக்க முடியல, கொன்னி கொன்னி தான் பேச்சு வரும். வீட்டுல இவருக்காக ஒரு ரூமா ஒதுக்கிப் பாத்துக்கிட்டா மணி. அவருக்கு வேட்டி கட்டி விடுறதும், குளிப்பாட்டி விடுறதும், பீ மூத்தரம் அள்ளிப் போடுறதும் எல்லா வேலையும் செய்தா மணி.
ஒரு நா வீட்டில, நாத்தம் தாங்கலனு சொல்லி சந்திரன் மணிக்கிட்ட சண்டை போட்டு மண்டையை ஒடைக்க, வீடே ரணகளாமாப்போச்சு. பிள்ளைகள் 'அம்மா'னு கத்த ஆரம்பிச்சிருச்சுக. இத்தனையும் பாத்துக்கிட்ட இருந்த பெரியகருப்பத்தேவரு கண்ணுல கண்ணீருடன் தன் மகக்கிட்ட பேசினாரு, "அம்மா என்னைய ஆத்துலையோ குளத்துலோயோ போட்டு கொன்னு புடுமா இதைப் பாக்குறதுக்குத்தான், இங்க வந்தேனா? இனி இந்த உசுரு இருந்த என்ன செத்த என்ன" என்று தன் கொன்னிப் பேச்சில் சொல்லி தலையிலே அடிச்சுக்கிட்டு அழுது, கீழ அப்படியே படுத்தவருதான். அப்பறம் எந்திரிக்கவே இல்ல.
உயிரோடு இருக்கும் போது பார்க்காத சொந்த பந்தம் இறந்த பின்னர் வந்து புதுப்பட்டிக்குச் சடலத்தைக் கொண்டு போனாங்க. ஈமச்சடங்கு நடந்தது. அப்பொழுது "பெத்த பிள்ள செய்ய வேண்டிய ஈமச்சடங்க மருமகன் செய்றாய்யா" என்ற ஊரு பெரிய மனுசர்களின பொலம்பல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக