RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

                             கந்தசாமி புண்ணாக்கு வியாபாரம்


                      புண்ணாக்கு வாங்குவதற்குகாக டவுன் வரை  போக கந்தசாமி  மினிபஸ்ஸில் ஏறினார். ஏறியதும் லேசாக கண் சொக்கியது  தான். அடுத்த நொடி டவுன்  வந்துவிட்டது. என்னா வேகமாக வண்டி ஓட்டுறாங்க' என மனதில் நினைத்தவா்புண்ணாக்கு கடையைநோக்கி நடக்க ஆரம்பித்தார்போகிற வழியில் ஒரு ட்ரை சைக்கிள் அதில் கருப்பு கலர்ல சூட்கேஸ் இருந்தது. சுற்றிலும் பார்த்தார்  யாரும் அவரை நோட்டம்  விட வில்லை. அப்படியே சூட்கேஸ  எடுத்து, கொண்டு வந்த கோணிப்பையில் வைத்து ஆள்  நடமாட்டம் இல்லாத இடத்தை தேடினார் . பழைய இடிந்த கட்டடம் ஒன்று கந்தசாமியின் கண்ணுக்குத் தென்பட்டது. உள்ள போய் கோணிப்பையில் இருந்த  சூட்கேஸ திறந்து  பார்த்தவுடன்   தலை சுற்றியது . அனைத்தும்  ஆயிரம் ரூபாய் கட்டுகள். துவைத்து அயன் பண்ணியது போல் மட மட இருந்தனஅப்படியே வீட்டிற்கு கொண்டு போனவர்  தான். புண்ணாக்கு கடையை முதலில் அவர்  ஊரிலேயே  தொடங்கினார். கந்தசாமி புண்ணாக்கு வியாபாரம் என்று பெயர் வைத்தார். வியாபாரம் பெருகியது. புண்ணாக்கு கடையின் எண்ணிக்கையும் கூடியது. ஆயிரம் ரெண்டாயிரம் பேருக்கு வேலை தந்தார். கந்தசாமியை கை எடுத்து வணங்கினார்கள்வருமானம் அதிகரித்தது. சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் கந்தசாமியின் புண்ணாக்கு வியாபாரத்தைப் பற்றிப் பேச தொடங்கினா். சிறந்த வியாபாரிக்கான தேசிய விருது கந்தசாமிக்கு வழங்கப்போவதாக  அறிவிக்கப்பட்டது.தனி விமானம் மூலம் கந்தசாமி டில்லி சென்றார். உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது. விருதை வழங்க கந்தசாமியை அழைத்தனர்வேட்டி சட்டை அணிந்துதுண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு  விருதை குடியரசு தலைவரிடம்  பெறும் போது  போது, விசில் சத்தம் கேட்டது. குடியரசு தலைவரைப் பார்த்தார்.

 'சார் உங்களுக்கு விசில் சத்தம் கேட்கலையா 'என்றார். அவரும் 'இல்லையே' என்றார்.

' !பிரம்ம போலஎன  மனதில் நினைத்து கொண்டு விருதை வாங்கினார். பத்தியாளர்கள் பலரும் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தனர். சற்று நேரத்தில் மீண்டும் விசில் சத்தம்.  'எருமநாயக்கன்பட்டி பட்டி வந்துருச்சு. கந்தசாமி மூட்டைய இறக்குப்பா' என்றார் நடத்துநர்.

'! கனவா?' என்றவன் மெல்ல இறங்கி வீட்டிற்குப் போனார் .

வாங்கியாந்த புண்ணாக்கை கட்டுத்தரையில் நின்றுயிருந்த  மாட்டிற்கு வைத்தார் . மாட்டிலிருந்து

பாலை பீய்ச்சி பண்ணைக்குக் கொண்டு போக, அன்று வழக்கத்தை விட ஒரு  லிட்டர் பால் கூடுதலாக  இருந்தது.
 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy